Sunday, 11 October 2020

புனித பெர்னார்ட்

   
    புனித பொர்னார்ட் ஒவ்வொரு நாளும் நற்கருணைக்கு முன்னால் அமர்ந்து ஆண்டவரை ஆராதித்து இறைவல்லமையும் ஆற்றலும் பெற்று இறைவனுக்கும், இறைமக்களுக்கும் உகந்தவராய் வாழ்ந்தார். ஒருமுறை புனித பேதுரு தேவலாயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது ஒருகாட்சி கண்டார். அதாவது பூமியிலிருந்து விண்ணகம்வரை ஏணி இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். ஏணியின் வழியாக எண்ணற்ற வானதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். அவர் வானதூதர்களை உற்றுப்பார்த்தார். விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கி வருகின்ற வானதூதர்களின் கரங்களில் ஒன்றுமில்லை. பூமியிலிருந்து விண்ணகம் ஏறி செல்கின்ற வானதூதர்கள் கரங்களில் எண்ணற்ற ஆன்மாக்களுடன் ஏறி செல்கின்றனர். உலகம் முழுவதும் குருக்கள் அர்ப்பணம் செய்கின்ற திருப்பலியின் தகுதியால் எண்ணற்ற ஆன்மாக்கள் மீட்படைகின்றனர். திருப்பலியின் வழியாக மீட்பு பெற்ற ஆன்மாக்களைத்தான் வானதூதர்கள் விண்ணகத்திற்கு அழைத்து செல்கின்றனர்.